Dec 4, 2025
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

Share:

சிங்கப்பூர், டிசம்பர்.04-

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பு அளித்து வருவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக மலேசியாவும், சிங்கப்பூரும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டு இருக்கின்றன என்பதை டத்தோ ஶ்ரீ அன்வார் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தப் பிராந்தியத்தில் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் போதைப் பொருள் நடவடிக்கைகளை முழு வீச்சில் துடைத்தொழிப்பதிலும் அது தொடர்பான பிரச்னைகளைக் கையாளுவதிலும் மலேசியாவும், சிங்கப்பூரும் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டு இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.

இன்று சிங்கப்பூருக்கு ஒரு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார், அந்நாட்டில் நடைபெற்ற 12வது மலேசியா – சிங்கப்பூர் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

Related News