கோலாலம்பூர், டிசம்பர்.04-
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகலில் மேக மூட்டம் வழக்கத்திற்கு மாறாகக் காணப்பட்டது. கோலாலம்பூர், கெப்போங் மற்றும் பத்துமலை குகைக்கு வெளியே வானத்தில் மேக மூட்டம் வழக்கத்திற்கு மாறாக மிக அடர்த்தியாகத் தோன்றியது.
தொடர்ந்து பெய்து வரும் மழைப் பொழிவின் காரணமாக வானில் இந்தத் தோற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று வலைவாசிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடர்த்தியான மேகக் கூட்டம் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வேகமாக நகர்வது போல் உள்ள காட்சியைப் பலர் தங்கள் முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.








