மூவார், டிசம்பர்.04-
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சக வகுப்பறை மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசத் தோற்றத்தில் வடிவமைத்ததாகக் கூறப்படும் மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர், மூவாரில் உள்ள ஒரு சீன இடைநிலைப்பள்ளியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மாணவிகளின் தோற்றத்தை, ஆபாசமாகச் சித்தரித்து, அப்படங்களைச் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக குறைந்தபட்சம் இரண்டு மாணவிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் கடந்த திங்கட்கிழமை புகார் அளித்தவுடனே பள்ளி நிர்வாக விசாரணை செய்யத் தொடங்கியதாக சுங் ஹுவா இடைநிலைப்பள்ளியின் முதல்வர் சியோன் செங் காங் தெரிவித்தார்.








