கோத்தா கினபாலு, டிசம்பர்.04-
பாரிசான் நேஷனலின் சர்சைக்குரிய அரசியல்வாதியும், சபா அம்னோ தலைவருமான புங் மொக்தார் ராடின், மிகக் கவலைக்கிடமான நிலையில் கோத்தா கினபாலு, Gleneagles மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கினபாத்தாங்கான் எம்.பி.யான புங் மொக்தார் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் மகன் நாயிம் குர்னியாவான் மொக்தார் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எம்.பி.யாக இருக்கும் புங் மொக்தாரின் உடல் உபாதை தொடர்பில் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.








