கோலாலம்பூர், செப்டம்பர்.11-
கணக்கியல் திட் படிப்பில், இவ்வாண்டு 85 காலி இடங்கள் இருந்ததாக உயர்க்கல்வித் துறை வெளியிட்டிருந்த புள்ளி விவரம் துல்லியமானது தான் என மலாயா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நேற்று மசீச கட்சித் தலைவர் வீ கா சியோங், மாணவர்கள் சேர்க்கையில், உயர்க்கல்வித் துறையின் புள்ளி விவரங்கள் முரணாக உள்ளது ஏன்? எனக் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் கல்வியமைச்சின் கவனத்திற்கு வந்தது.
இந்நிலையில், இக்கேள்விக்குப் பதிலளித்துள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் அஸுவான் அபு ஒஸ்மான், இவ்வாண்டு 113 மாணவர்கள் சேர்க்கையில், 85 பேர் யுபியு வழியாகச் சேர்ந்தவர்கள் என்றும், 28 பேர் பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளைத் திட்டம் வழியாகச் சேர்ந்தவர்கள் என்றும் விளக்கமளித்துள்ளார்.








