Oct 19, 2025
Thisaigal NewsYouTube
"போர் வேண்டாம், அமைதி மட்டுமே தீர்வு!": பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதலைத் தவிர்க்க பிரதமர் அன்வார் அவசர அழைப்பு!
தற்போதைய செய்திகள்

"போர் வேண்டாம், அமைதி மட்டுமே தீர்வு!": பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதலைத் தவிர்க்க பிரதமர் அன்வார் அவசர அழைப்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.19-

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லையில் நீடிக்கும் பதற்றம் குறித்து மலேசியப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். இப்போர் நிலை நீடித்தால், இரு நாடுகளின் மக்களும் மேலும் துயரடைவார்கள் என்றும், வட்டாரத்தின் அமைதி கேள்விக் குறியாகும் என்றும் அன்வர் தனது சமூக ஊடகப் பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதையொட்டி, அவர் நேற்று இரவு பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif, ஆப்கானிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் Mullah Mohammad Hassan Akhund ஆகியோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரச்சினைக்குத் தூதரக வழிமுறையிலும் பேச்சு வார்த்தை மூலமும் மட்டுமே அமைதியான தீர்வு காண முடியும் என்று வலியுறுத்தினார்.

மலேசியா, இவ்விரு நாடுகளின் அமைதி முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும், குறிப்பாகக் கத்தார் அரசின் மேற்பார்வையில் நடைபெறும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் வெற்றி பெறத் துணை நிற்கும் என்றும் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உறுதியளித்தார். மேலும், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஆகிய இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாந்தநேய உதவிகள் வழங்க அனைத்துலகச் சமூகத்துடன் இணைந்து மலேசியா செயல்படும் என்றும் அவர் அறிவித்தார்.

பிரதமரின் இந்த மாந்தநேய நடவடிக்கை, இஸ்லாமியச் சகோதரத்துவத்தையும் வட்டார நிலைத்தன்மையையும் நிலைநாட்டுவதற்கான மலேசியாவின் உறுதியான வெளிப்பாடு ஆகும். ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தையை வலியுறுத்திய அதே சமயம், மறுபுறம் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இரு நாட்டு மக்களுக்கும் அன்வார் ஆழ்ந்த இரங்கலையும், உதவிக் கரத்தையும் நீட்டியுள்ளார்.

Related News

சபாவுக்கு அருகில் Fengshen புயல்: மலேசியாவில் பெரிய பாதிப்பு இல்லை!

சபாவுக்கு அருகில் Fengshen புயல்: மலேசியாவில் பெரிய பாதிப்பு இல்லை!

பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை: மனநலப் பிரச்னைகளே காரணம்! - பெற்றோர்களுக்கு மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!

பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை: மனநலப் பிரச்னைகளே காரணம்! - பெற்றோர்களுக்கு மருத்துவர் சங்கம் எச்சரிக்கை!

எண்ணெய் நிரப்பும் இடத்தில் அடிதடி: 'வரிசை தாண்டியதாக'க் கூறி ஓட்டுநரால் ஒருவர் தாக்கப்பட்டார்!

எண்ணெய் நிரப்பும் இடத்தில் அடிதடி: 'வரிசை தாண்டியதாக'க் கூறி ஓட்டுநரால் ஒருவர் தாக்கப்பட்டார்!

அமெரிக்காவுக்கு இணையாக மலேசியக் கடப்பிதழ் ! - உலகத் தரவரிசையில் 12ஆம் இடம் பிடித்துப் பெருமை!

அமெரிக்காவுக்கு இணையாக மலேசியக் கடப்பிதழ் ! - உலகத் தரவரிசையில் 12ஆம் இடம் பிடித்துப் பெருமை!

மைகாட் தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்படும்! - சாரா மானியம் உரியோருக்குக் கிடைக்க மத்திய அரசு உறுதி!

மைகாட் தொழில்நுட்பச் சிக்கல் நீக்கப்படும்! - சாரா மானியம் உரியோருக்குக் கிடைக்க மத்திய அரசு உறுதி!

"அமைதி நிரந்தரமல்ல!" - இராணுவத் தயார் நிலையைக் கைவிட வேண்டாம்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை!

"அமைதி நிரந்தரமல்ல!" - இராணுவத் தயார் நிலையைக் கைவிட வேண்டாம்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை!