May 3, 2026
Thisaigal NewsYouTube
2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்
தற்போதைய செய்திகள்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

Share:

பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் முன்னாள் மூத்த மேலாளர், மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்தோனேசிய நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள திருடப்பட்ட பணத்தை பெற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு, இன்று மீண்டும் கோலாலம்பூர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

36 வயதான என்.வி. விமல், நீதிபதி எஸ். புனிதா முன்னிலையில் இரண்டு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டபோது, குற்றமற்றவர் என மறுத்தார்.

முதல் குற்றச்சாட்டின் படி, குற்றஞ்சாட்டப்பட்டவர் மேபேங்க் வங்கி கணக்கில் 7 லட்சத்து 35 ஆயிரத்து 294.11 ரிங்கிட் தொகையை, அது திருடப்பட்ட சொத்து என்பதை அறிந்திருந்தும் லஞ்சமாகப் பெற்றதாக கூறப்படுகிறது.

அத்தொகையானது பிடி ஸ்டீலிண்டோ வஹானா பெர்காசா நிறுவனத்துக்குச் சொந்தமானது.

இரண்டாவது குற்றச்சாட்டின் கீழ், அதே நிறுவனத்துக்குச் சொந்தமான 14 லட்சத்து 47 ஆயிரத்து 521 ரூபாய் 87 ரிங்கிட் தொகையையும் தனது வங்கி கணக்கில் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Related News

3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை

3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை

குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து:  5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு

குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படாது: கல்வி அமைச்சர் ஃபட்லினா திட்டவட்டமான உறுதி

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படாது: கல்வி அமைச்சர் ஃபட்லினா திட்டவட்டமான உறுதி

ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின

ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின

மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி

மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி

வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கும் பெர்கேசோ பாதுகாப்பு: விரைவில் சட்டத் திருத்தம் தாக்கல் – மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கும் பெர்கேசோ பாதுகாப்பு: விரைவில் சட்டத் திருத்தம் தாக்கல் – மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு