Mar 19, 2026
Thisaigal NewsYouTube
முஸ்லிம் – இந்து அமைப்புகளின் சந்திப்பு மலேசியாவின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கிறது / பிரதமர் அன்வார் பாராட்டு
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் – இந்து அமைப்புகளின் சந்திப்பு மலேசியாவின் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கிறது / பிரதமர் அன்வார் பாராட்டு

Share:

நாட்டில் இன வாதப்பிரச்சினைகளைத் தீர்க்க, முஸ்லிம் மற்றும் இந்து சமுதாய அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள அமைதி முயற்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இந்த முயற்சியானது, நாட்டில் ஒற்றுமையை வலுப்படுத்தும் சமூக முதிர்ச்சியின் சான்றாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு சமயத்தினர் நேரடியாகக் கலந்துரையாடி, புரிதலை வளர்த்துக்கொள்வது, சமுதாய அமைதிக்கும் நீண்டகால ஒற்றுமைக்கும் முக்கியமான படியாகும் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், பிரிவினையை தூண்டும் செயல்களை மறுத்து, பரஸ்பர மரியாதையை ஊக்குவிக்கும் இந்த முயற்சியானது, மலேசியாவின் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்துவதாகவும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

இது தான் மலேசியாவின் உண்மையான உணர்வு என்றும், கருணை, ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை அஸ்திவாரமாகக் கொண்ட நாடாக மலேசியா உள்ளது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.

நேற்று புத்ரா ஜெயா பன்னாட்டு மாநாட்டு மைய வளாகத்தில், ‘மதானி ஒற்றுமை’ திட்டத்தின் கீழ் கலந்துரையாடல் அமர்வு ஒன்று நடைபெற்றது.

அதில், மலேசியாவில் உள்ள முஸ்லிம் மற்றும் இந்து சமுயாத்தைச் சேர்ந்த அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இனவாதப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

முஸ்லிம் – இந்து அமைப்புகளின் சந்திப்பு மலேசியாவின் உண்மை... | Thisaigal News