Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கிரிக் அருகே நெடுஞ்சாலையில் காட்டு யானைகள்: பெரிலிட்டன் நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

கிரிக் அருகே நெடுஞ்சாலையில் காட்டு யானைகள்: பெரிலிட்டன் நடவடிக்கை

Share:

கிரிக் அருகிலுள்ள கிழக்கு – மேற்கு நெடுஞ்சாலை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் சுற்றித் திரிந்ததை வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான பெரிலிட்டன் கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக, நேற்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில், கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக Perak மாநில பெரிலிட்டன் இயக்குநர் முகமட் தவ்பிக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

குட்டி யானைகள் உட்பட அந்த யானைகள் கூட்டத்தை, எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மீண்டும் காட்டுப் பகுதிக்குள் விரட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் வைரலான 48 விநாடிகள் கொண்ட காணொளி ஒன்றில், நெடுஞ்சாலையின் ஓரத்தில், யானைகள் நின்றிருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்திப் பார்வையிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Related News