அண்மையில் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த ஜப்பான் இச்சிகாவா சிட்டி உயிரியல் பூங்காவில் வாழும் ‘பஞ்ச்’ என்ற ஏழு மாத குரங்கு, தற்போது ஒரு பெண் குரங்குடன் நெருக்கமாக பழகி வருவது சமூக ஊடகங்களில் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.
டிக்கடாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட காணொளிகளில், பஞ்ச் அந்த பெண் குரங்கான ‘மோமோ-சான்’ உடன் முத்தமிடுவது, அணைத்துக்கொள்வது மற்றும் விளையாடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதற்கு முன்பாக, கடந்த பிப்ரவரி மாத மையப்பகுதியில் வெளியான காணொளிகளில், தாயால் கைவிடப்பட்ட பஞ்ச் குரங்கானது, மற்ற குரங்குகளால் தொந்தரவு செய்யப்பட்டதாகவும், பின்னர் ஐக்கியாவின் மெத்தை பொம்மை மற்றும் மனித பராமரிப்பாளரை நம்பி ஆறுதல் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது மோமோ-சான் உடன் பஞ்சின் நெருக்கமான உறவு இணையவாசிகளை நிம்மதியடையச் செய்துள்ளது.








