Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கள்ள நோட்டுகளை வைத்திருந்ததாக தனித்து வாழும் தாயார் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கள்ள நோட்டுகளை வைத்திருந்ததாக தனித்து வாழும் தாயார் மீது குற்றச்சாட்டு

ஷா ஆலாம், டிச.4-


தன் வசம் ஐந்தாயிரத்து 160 ரிங்கிட் மதிப்புள்ள கள்ள நோட்டுளை வைத்திருந்ததாக தனித்து வாழும் தாயார் ஒருவர், ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

26 வயது நூர் ஷாஸா நபிலா ஜமானி என்ற அந்த தனித்து வாழும் தாயார், நீதிபதி முகமட் அனாஸ் மஹாட்ஷிர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி இரவு 11.11 மணியளவில் அம்பாங், தாமான் டத்தோ அகமட் ரஸாலி குடியிருப்புப்பகுதியில் உள்ள ஒரு சலவைக் கடையில் அந்தப் பெண் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →