பேரா, சிலிம் ரீவரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த மாதம் ஆயுதமேந்தி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், 25 வயது ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உள்ளூர் பிரஜையான அந்த சந்தேக நபர், நேற்று வியாழக்கிழமை இரவு சுமார் 11.30 மணியளவில் சிலாங்கூர், ராவாங்கில் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஜுலை மாதம் முதலாம் தேதி அதிகாலை 1.49 மணியளவில், 22 வயது பெண் ஒருவர் கொள்ளைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
அவரை அடையாளம் தெரியாத இரு ஆயுதமேந்திய ஆடவர்கள் கொள்ளையடித்து, ரொக்கம், நகைகள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசிகளை பறித்துச் சென்றுள்ளனர். இதனால் சுமார் 4,800 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விசாரணைக்கு உதவக்கூடியதாக கருதப்படும் ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர் வரும் 19ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.








