Aug 14, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் இளைஞர் மாநாட்டில் சூடான விவாதம் : அன்வாருக்கு துரோகம் – இளைஞர் தலைவர் சாடல்
தற்போதைய செய்திகள்

பிகேஆர் இளைஞர் மாநாட்டில் சூடான விவாதம் : அன்வாருக்கு துரோகம் – இளைஞர் தலைவர் சாடல்

Share:

பிகேஆர் இளைஞர் பிரிவு மாநாட்டில் இன்று சூடான விவகாரம் வெடித்துள்ளது. 15ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அழிவின் விளிம்பில் இருந்த அம்னோவை காப்பாற்ற பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முயன்றதாகவும், அதற்குப் பதிலாக அவருக்கே துரோகம் இழைக்கப்பட்டதாகவும் பிகேஆர் இளைஞர் பிரிவு பேராளர் முகமட் ஹுரைமி முகமட் ஹுஸ்ரி, பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், அம்னோ நெருக்கடியில் இருந்தபோது, அது தொடர்ந்து ‘மரணிக்காமல்’ காப்பாற்ற அன்வார் முயன்றதாகக் கூறினார்.

ஆனால், அந்த உதவிக்கு நன்றியாக அன்வார் மதிக்கப்படவில்லை என்றும், மாறாக துரோகம் இழைக்கப்பட்டார் என்றும் அவர் அதிரடியாக சாடினார்.

அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், நண்பர்களாக இருந்தவர்களையே முதுகில் குத்தும் நிலைக்கு கொண்டு செல்லும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதனிடையே, மலாய்க்கார்ர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக தொடர்ந்து பிரசாரம் செய்வதாகக் கூறி, அரசியல் சித்து விளையாட்டைக் காட்டி வரும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவை மலாக்கா பிகேஆர் இளைஞர் பிரிவு பேராளர் முஹம்மட் ஹகிம், கடுமையாக விமர்சித்தார்.

Related News