Aug 14, 2026
Thisaigal NewsYouTube
மகன் மீதான தாக்குதல்: விசாரணை ஏன் அமைதியாகிவிட்டது? – ரஃபிஸி
தற்போதைய செய்திகள்

மகன் மீதான தாக்குதல்: விசாரணை ஏன் அமைதியாகிவிட்டது? – ரஃபிஸி

Share:

தமது மகன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணை எந்த நிலையில் உள்ளது என முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ரம்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள வணிக வளாகத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. தாம், மனைவி மற்றும் மகன் காரை நோக்கிச் சென்றபோது, முழுவதும் கறுப்பு உடை அணிந்து, முகத்தை முழுமையாக மறைத்திருந்த இருவர் தமது மகனை இழுத்துச் சென்று ஊசி மூலம் தாக்கியதாக ரஃபிஸி கூறினார்.

சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகளும், மிரட்டல் குறுந்தகவல்கள் அனுப்பப்பட்ட தொலைபேசி எண்ணும் இருந்தபோதிலும், விசாரணை தற்போது அமைதியாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர் குறித்து தம்மிடம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டதாகவும், , ஆனால் நாடாளுமன்றத்தில் அதுகுறித்து பதிலளிக்க மறுக்கப்பட்டிருப்பதாகவும் ரஃபிஸி கூறினார்.

தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படும் வரை, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 13ஆம் தேதியை நினைவுகூரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News