கோலாலம்பூர், செப்டம்பர்.21-
தன்னார்வத் தீயணைப்புப் படை வீரர்களின் ஆண்டு ஊதியத்தை ஐந்தாயிரம் ரிங்கிட்டில் இருந்து 10 ஆயிரம் ரிங்கிட்டாக உயர்த்த, வீட்டுவசதி, ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சு ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்த வீரர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த ஊதிய உயர்வு சேர்க்கப்பட வேண்டும் என்று நிதி அமைச்சுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதி, ஊராட்சி மன்ற மேம்பாட்டு துணை அமைச்சர் அய்மான் அதீரா சாபு தெரிவித்தார். இந்தப் புதிய முயற்சி, நாட்டின் பாதுகாப்பை உறுதிச் செய்யத் தன்னார்வலர்களின் பங்களிப்பை மேலும் ஊக்குவிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








