எதிர்காலத்தில் எந்தவொரு திட்டத்திற்கும் அல்லது கொள்கை அமலாக்கத்திற்கும் அனுமதியை விரைவுபடுத்த, நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளின் ஆக்கத்திறனின் நிலை மேம்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
தற்போது நாட்டில் திட்ட அமலாக்கத்தின் ஆக்கத்திறன் நல்ல நிலையிலலிருந்தாலும், திட்ட அனுமதியின் வேகம் இன்னும் திருப்திகரமாக இல்லை என்றார்.
எனவே, திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை கையாள்வதற்கான திட்டமிடல், வழிகள் ஆகியன குறித்து னாரசு அதிகாரிகளுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றார்.
குறிப்பாக, இதற்கு முன்னர் முடிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சி மன்றங்கள் தாமதிக்கக் கூடாது என பிரதமர் அறிவுறுத்தினார்.
இன்று காலை கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் நடத்தப்பட்டச் சந்திப்பின்போது, தலைநகரில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மேம்பாட்டுத் திட்டங்களின் நிலை குறித்து இன்னும் 2 வாரங்களில் தமக்கு விளக்கமளிக்கப்படும் எனக் கூறிய பிரதமர், அவை தாமதிக்காமல் தடுக்கவும் எந்தத் தரப்பினரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் வழி வகை செய்ய உதவும் என்று மேலும் சொன்னார்.








