கடந்த சில மாதங்களாக நிலவி இருந்த கடும் வெப்பத்தின் காரணத்தால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வேளையில், நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கி அவற்றை மீண்டும் செயல்படுத்த கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெப்பமான காலநிலையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அமலாக்கக் குழு உறுப்பினர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், வெளிப்புற நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்குக் கல்வி அமைச்சு மீண்டும் அங்கீகாரம் அளித்துள்ளதாக கல்வித் துணை இயக்குநர் டாக்டர் நூரிசாஹ் சுஹைலி தெரிவித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


