May 21, 2026
Thisaigal NewsYouTube
2 பாக்கிஸ்தான் உணவகங்களில் அதிரடிச் சோதனை !
தற்போதைய செய்திகள்

2 பாக்கிஸ்தான் உணவகங்களில் அதிரடிச் சோதனை !

Share:

கட்டுப்படுத்தப்பட்டப் பொருட்களையும் உள்நாட்டு வாணிப அமைச்சின் பெர்மிட்டுகளையும் தவறாகப் பயன்படுத்தும் 2 பாக்கிஸ்தான் உணவகங்களில் அதிரடிசொ சோதனை நடத்தப்பட்டது.

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் அமைந்துள்ள அந்த உணவகங்களில்
முறாஈஏஏ 37 கிலோ, 39 கிலோ எடை கொண்ட சமையல் எண்ணெயை வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கோலாலம்பூர் கேபிடிஎன் இயக்குநர் அரிஃபின் சம்சுடின் தெரிவித்தார்.

அளவுக்கு மீறிய சமையல் எண்ணெயை அந்த இரு பாக்கிஸ்தான் உணவகங்களும் முறையான லைசன்ஸ் இல்லாமல் வைத்திருந்ததை பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்து பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

மேலும், அங்கு விற்கப்படு தேனீர் தூளுக்கான விலையை பார்வைக்கு வைக்காததும் இச்சோதனையும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரு உணவகங்களில் இருந்து 76 கிலோ சமையல் எண்ணெய்யும் 24 தேனீர் தூள் பேக்கேட்டுகளையும் அமைச்சின் அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ஆயிரத்து 100 வெள்ளி ஆகும்.

அதே சமயம், அந்த இரு உணவகங்களின் உரிமையாளர்களும் பாக்கிஸ்தான் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாகவும் கடந்த 20 ஆண்டுகளாக மலேசியாவில் வசித்து வந்ததால் உள்ளூர்வாசியைத் திருமணம் செய்து மலேசியாவின் நிரந்தக் குடியிருப்பாளர்கள் எனத் தகுதி கொண்டவர்களாக இருப்பதும் இச்சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் கூடுதல் விசாரணைக்காக அவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வொரு உணவகங்களுக்கும் அந்த சமையல் எண்ணெயை விநியோகிக்கும் விநியோகிப்பாளர் விவரம் குறித்தும் விசாரணை செய்யப்படும் எனவும் அரிஃபின் சம்சுடின் தெரிவித்தார்.

Related News