Jul 31, 2026
Thisaigal NewsYouTube
முதுகு, இடுப்பு வலி: தொடர் சிகிச்சைக்காக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஓய்வு
தற்போதைய செய்திகள்

முதுகு, இடுப்பு வலி: தொடர் சிகிச்சைக்காக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஓய்வு

Share:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், முதுகு மற்றும் இடுப்புப் பகுதியை பாதித்துள்ள தசை-எலும்பு வலிக்காக தொடர் மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்தானா நெகாரா இன்று அறிவித்துள்ளது.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி, சிகிச்சைக்கு முன் முழுமையான ஓய்வு அவசியம் என்பதால், இன்று புத்ராஜெயாவில் உள்ள டத்தாரன் பஹ்லவான் நெகாராவில் நடைபெற்ற வீரர் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் மாமன்னர் பங்கேற்க இயலவில்லை என்று அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியான் இஸ்மாயில், தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின், ஆயுதப் படைத் தளபதி மாலிக் ரசாக் சுலைமான் மற்றும் தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News