Sep 21, 2026
Thisaigal NewsYouTube
நஜிப் வீட்டுக் காவல் ஏற்பாடுகள் தீவிரம்… இல்லத்தில் போலீஸ், சிறைத்துறை ஆய்வு
தற்போதைய செய்திகள்

நஜிப் வீட்டுக் காவல் ஏற்பாடுகள் தீவிரம்… இல்லத்தில் போலீஸ், சிறைத்துறை ஆய்வு

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஸாக்கின் வீட்டுக் காவலுக்கான ஏற்பாடுகள் தொடரும் நிலையில், கோலாலம்பூரில் உள்ள அவரது இல்லத்தை சிறைத்துறையும் போலீசாரும் இன்று ஆய்வு செய்தனர்.

ஜாலான் லங்காக் டூத்தாவில் உள்ள இல்லத்தை ஆய்வு செய்த பின்னர் பேசிய செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அனுவார் பக்ரி அப்துல் சலாம், வீட்டுக் காவல் தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.

பாதுகாப்பு தொடர்பான பணிகளை போலீசார் மேற்கொள்வார்கள் என்றும், இல்லத்திற்குள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சிறைத்துறையின் பொறுப்பில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

வீட்டுக் காவல் ஏற்பாடுகள் தொடர்பான இறுதி முடிவு உயர்மட்டத்தில் எடுக்கப்படும் என்றும், முடிவு செய்யப்பட்டதும் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், நஜிப்பின் இல்லத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்கப்படும் என்ற தகவல் உண்மையல்ல என்றும் அனுவார் பக்ரி தெளிவுபடுத்தினார்.

இதனிடையே, நஜிப் வீட்டுக் காவலில் செல்லும் நடைமுறை தொடங்குவதற்கு முன்பு 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த வேண்டும். அந்தத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்று சட்டத்துறை தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் டுசுக்கி மொக்தார் இன்று தெரிவித்துள்ளார்.

Related News