Sep 21, 2026
Thisaigal NewsYouTube
ஒரு வருடமே வேலை… விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நலன்கள்
தற்போதைய செய்திகள்

ஒரு வருடமே வேலை… விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடும்பங்களுக்கு பெர்கேசோ நலன்கள்

Share:

பேரா, ஜெலாபாங்-அம்பாங் பகுதியில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்த 19 வயது இளைஞர்கள் இருவரும், வேலைக்குச் சேர்ந்து சுமார் ஒரு வருடமே ஆன நிலையிலும், பெர்கேசோ எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் லிண்டுங் 24 ஜாம் திட்டத்தில் தொடர்ந்திருந்ததால், அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து நலன்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

முகமட் இஸ்திஹார் ரஃபிக், இந்த ஆண்டு ஜனவரி முதல் பெர்கேசோவில் பங்களிப்பு செய்து வந்த நிலையில், முஹமட் ஃபைஸ் டானியல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் பங்களித்து வந்தார்.

இருவரின் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் முறையே 945 மற்றும் 891 ரிங்கிட் சார்ந்தோர் நலத்தொகையாக வழங்கப்படும்.

இத்தொகை பெற்றோருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுவதுடன், உடன்பிறப்புகளுக்கு 21 வயது வரை அல்லது பட்டப்படிப்பை முடிக்கும் வரை வழங்கப்படும்.

மேலும், இரு குடும்பங்களுக்கும் தலா 3,000 ரிங்கிட் இறுதிச் சடங்கு நலத் தொகை ஒருமுறை வழங்கப்படும்.

15 ஆண்டுகளில், இரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் மொத்த சார்ந்தோர் ஓய்வூதியத் தொகை 2 லட்சத்து 75 ஆயிரம் ரிங்கிட்டைத் தாண்டும் என்று பெர்கேசோ தெரிவித்துள்ளது.

விபத்து வேலை நேரத்துக்கு வெளியே நடந்தாலும், லிண்டுங் 24 ஜாம் திட்டத்தில் தொடர்ந்திருந்ததால் இந்த நலன்கள் கிடைப்பதாகவும் பெர்கேசோ கூறியுள்ளது.

Related News

ஒரு வருடமே வேலை… விபத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் குடு... | Thisaigal News