பேராக் மாநிலம் துரோனோ அருகே, தாமான் துரோனோ பாருவில் உள்ள பெட்ரோல் நிலையக் கழிவறையில் 39 வயது ஆடவர் ஒருவர் இன்று இறந்த நிலையில் காணப்பட்டார்.
பிற்பகல் 2.20 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, பத்து காஜா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் அங்கு சென்ற போது, போலீசாரும் சுகாதார அமைச்சு அதிகாரிகளும் ஏற்கனவே இருந்தனர்.
கழிவறைக் கதவு சட்டத்தில் சிக்கிய நிலையில், அந்த ஆடவர் மயக்கமடைந்த நிலையில் கிடந்ததாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
பின்னர் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
அவரது உடல் மீட்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மீட்பு நடவடிக்கை பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.








