மலேசியா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட எச் (H) ரக சிறப்பு வாகனப் பதிவு எண்களுக்கான ஏலத்தில், சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜே, 91.21 மில்லியன் ரிங்கிட் வசூலித்துள்ளது.
இதில், 89.27 மில்லியன் ரிங்கிட் ஏலத் தொகையாகவும், 1.94 மில்லியன் ரிங்கிட் சேவைக் கட்டணமாகவும் கிடைத்துள்ளன.
செப்டம்பர் 16 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த ஏலத்தில், 34,664 பேர் பங்கேற்றதுடன், 8,223 பதிவு எண்கள் ஏலம் விடப்பட்டன.
அதிகபட்சமாக எச் 1 பதிவு எண் 10.78 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலம் போனது. இதற்கு அடுத்த நிலையில் எச் 9, 4.97 மில்லியன் ரிங்கிட்டுக்கும், எச் 3, 4.21 மில்லியன் ரிங்கிட்டுக்கும் ஏலம் போயின.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.








