Sep 23, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

Share:

தேசிய அளவில் போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் இருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

கெடாவில் நடைபெற்ற "புரோகிராம் ஜெலாஜா அஸ்பிரசி பெபாஸ் டாடா" நிகழ்ச்சியில் பேசிய அவர், தாய்லாந்து எல்லைப் பகுதி மற்றும் 15 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் இப்பகுதியில் செயற்கை போதைப்பொருள் அபாயம் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அரசின் நடவடிக்கைகளுடன் குடும்பம், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டு ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில்... | Thisaigal News