Sep 23, 2026
Thisaigal NewsYouTube
செராஸ் பண்டார் டாமாய் பெர்டானாவில் நிலச்சரிவு... கட்டடப் பாதுகாப்பு குறித்து ஆய்வு
தற்போதைய செய்திகள்

செராஸ் பண்டார் டாமாய் பெர்டானாவில் நிலச்சரிவு... கட்டடப் பாதுகாப்பு குறித்து ஆய்வு

Share:

கோலாலம்பூர், செராஸ், பண்டார் டாமாய் பெர்டானாவில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டடப் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் விரிவான ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.

நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் 45 வீடுகளைச் சேர்ந்த சுமார் 80 குடியிருப்பாளர்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர்.

காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் டான் கா ஹோ கூறுகையில், பொதுப்பணித் துறை, கனிமவியல் மற்றும் புவியியல் துறை, காஜாங் நகராண்மைக் கழகம் ஆகியவை இணைந்து ஆய்வை மேற்கொண்டு வருகின்றன.

கட்டடம் தொடர்ந்து குடியிருப்பதற்கு பாதுகாப்பானதா என்பது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கைகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலச்சரிவுக்கு நீர்க்குழாய் கசிவு காரணமா என்பதும் விசாரிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்காக டேசா பைடூரி சமூக மண்டபத்தில் தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலச்சரிவு ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, பாதிக்கப்பட்ட சரிவு பகுதி தார்ப்பாயால் மூடப்பட்டுள்ளது. குடியிருப்பு வளாகத்துக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தண்ணீர் லாரிகள் மூலம் குடியிருப்பாளர்களுக்கு சுத்தமான நீர் வழங்கப்படவுள்ளது.

Related News