Sep 30, 2026
Thisaigal NewsYouTube

எரிபொருள் விலை குறைந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எரிபொருள் விலை குறைந்துள்ளது

கோலாலம்பூர், ஜனவரி.07-

எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் மானியம் அல்லாத பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.

பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு ஐந்து சென் குறைந்த்துள்ளது. 3 ரிங்கிட் 16 சென்னாக இருந்த ரோன் 97, 3 ரிங்கிட் 11 சென்னாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானிய சலுகையற்ற பெட்ரோல் ரோன் 95, லிட்டருக்கு 2 சென் குறைக்கப்பட்டு, 2 ரிங்கிட் 54 சென்னாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு 5 காசு குறைக்கப்பட்டு, 2 ரிங்கிட் 89 சென்னாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானிய சலுகைக்கு உரிய பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு ஒரு ரிங்கிட் 99 சென்னுக்கு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →