பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வான் இப்ராஹிம் மின், சீனப் பயணம், நேர்மறையான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ம.இ.கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பிரதமரின் இந்த வருகை மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான நல்லுறவையும், பங்களிப்பையும் காட்டுகிறது என்று ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அன்வாரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுடன், அவர் வருகை மேற்கொண்ட கிழக்காசியாவின் முதல் நாடாக சீனா விளங்குகிறது என்று சரவணன் குறிப்பிட்டார்.
சீன அதிபர்ஜி ஜின்பிங்கும், பிரதமர் அன்வாரும் நேரடியாக சந்தித்திருப்பது, மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்வதாக உள்ளதென தாப்பா எம்.பி. யுமான சரவணன் வர்ணித்தார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


