கங்கார், ஆகஸ்ட்.21-
கங்கார், கோல பெர்லிஸில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்து கொள்ளையிட்ட குற்றத்திற்காக சீன நாட்டைச் சேர்ந்த மூன்று பேருக்கு கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 28 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.
30 க்கும் 50 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 3 சீன நாட்டுப் பிரஜைகளும் கடந்த ஜுலை 18 ஆம் தேதி இரவு 10 மணயளவில் கோல பெர்லிஸ், தாமான் புக்கிட் குபு ஃபாசா 2 இல் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள், சீன மொழிப்பாளர் உதவியுடன் வாசிக்கப்பட்டது.








