ஈப்போ, செப்டம்பர்.20-
ஈப்போ, புந்தோங்கில் உள்ள ஒரு நீர் வீழ்ச்சியில் கால் இடறி கீழே விழுந்த ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் நிகழ்ந்தது.
ஜாத்தி இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த பாயு ஸானி இமான் என்று அடையாளம் கூறப்பட்ட மாணவனே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்ததாக அடையாளம் கூறப்பட்டது என்று பேராக் மாநில தீயணைப்பு, மீட்புப்படை இடைக்கால இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.








