Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கேபிள் துண்டிக்கப்பட்டதால் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேபிள் துண்டிக்கப்பட்டதால் கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிப்பு

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கான கேஎல்ஐஏ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது, இன்று காலை புத்ராஜெயா-சைபர்ஜெயா மற்றும் சாலாக் திங்கி ரயில் நிலையங்களுக்கு இடையே கேபிள் துண்டிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, கேஎல் சென்ட்ரல் மற்றும் புத்ராஜெயா-சைபர்ஜெயா நிலையத்துக்கு இடையிலும், அங்கிருந்து கேஎல்ஐஏ முனையம் 2 நிலையத்துக்கும் இடையே மாற்று ரயில் சேவைகளை இயக்குவதாக ரயில் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் புத்ராஜெயா-சைபர்ஜெயா நிலையத்தில் நடைமேடையை மாற்றி, கேஎல்ஐஏ முனையம் 1 அல்லது 2 அல்லது கேஎல் சென்ட்ரல் நிலையத்துக்குப் பயணிக்க வேண்டும் என்றும், மாற்று ரயில்கள் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இயக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →