Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கோலாலம்பூரில் 6 வாகனங்கள் மோதிய விபத்து: பிஒய்டி கார் ஓட்டுநர் கண்டறியப்பட்டார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கோலாலம்பூரில் 6 வாகனங்கள் மோதிய விபத்து: பிஒய்டி கார் ஓட்டுநர் கண்டறியப்பட்டார்

கோலாலம்பூர் ஜாலான் கூச்சிங் சாலையில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் ஆறு வாகனங்கள் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தார்.

பெரோடுவா பேஸ்ஸா காரின் பின்புற இருக்கையில் பயணித்த அச்சிறுமி, தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இவ்விபத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர்.

பிற்பகல் 3.44 மணியளவில் நகர மையத்திலிருந்து செகாம்புட் நோக்கிச் செல்லும் சாலையில் போக்குவரத்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த போது, பிஒய்டி சீல் இரக காரானது, பெரோடுவா பேஸ்ஸா காரின் பின்புறத்தில் மோதியதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் முஹமட் ஸம்ஸுரி முஹமட் இசா தெரிவித்துள்ளார்.

இந்த மோதலின் தாக்கத்தால் பேஸ்ஸா கார், ஒரு மோட்டார் சைக்கிள், நிசான் அல்மேரா, டொயோட்டா அல்ஃபார்ட் மற்றும் பெரோடுவா மைவி ஆகிய வாகனங்கள் மீது மோதியது.

இவ்விபத்து தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், பிஒய்டி காருடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஓட்டுநர் டாமன்சாராவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் போலீசார் அவரைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →