Oct 11, 2026
Thisaigal NewsYouTube

‘புகைமூட்டம்: ஜோகூரில் நாளை நடைபெறவிருந்த பள்ளித் தேர்வுகள் ஒத்திவைப்பு’

திசைகள் செய்திப்பிரிவு
Share:
‘புகைமூட்டம்: ஜோகூரில் நாளை நடைபெறவிருந்த பள்ளித் தேர்வுகள் ஒத்திவைப்பு’

ஜோகூரில் நிலவும் கடுமையான புகைமூட்டம் காரணமாக, நாளை அக்டோபர் 12ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறவிருந்த பள்ளித் தேர்வுகளும் மதிப்பீடுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதில், நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான கற்றல் மதிப்பீட்டுத் தேர்வான எம்பிடி4, சிறப்புப் பள்ளிகளில் சேர்வதற்கான மதிப்பீட்டுத் தேர்வான பிகேஎஸ்கே ஆகியவையும் அடங்கும்.

பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள், ஜோகூர் கல்வித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முடிவுகளுக்கு ஏற்ப அறிவிக்கப்படும். ஜோகூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கல்வி நிலையங்களும் அக்டோபர் 12 முதல் 16ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →