Oct 11, 2026
Thisaigal NewsYouTube

பேரிடர் மீட்புக் கருவிகளை மேம்படுத்த நட்மாவுக்கு 260 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேரிடர் மீட்புக் கருவிகளை மேம்படுத்த நட்மாவுக்கு 260 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

பேரிடர்களை எதிர்கொள்வதற்கான மீட்பு உபகரணங்களை மேம்படுத்தவும், அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் 2027ஆம் ஆண்டு நட்மா (NADMA)தேசிய பேரிடர் மேலாண்மை முகமைக்கு 260 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

படகுகள், நீர் இறைக்கும் பம்புகள், தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் போன்றவை மீட்புப் பணிகளுக்கும் பேரிடர் காலக் குடிநீர் விநியோகத்துக்கும் அவசியம் என்றார். போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ராணுவம், குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றிடம் போதிய உபகரணங்கள் இல்லாததால் அவற்றை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், அடிக்கடி வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் நிரந்தர நிவாரண மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு நிரந்தர மையங்களை அமைப்பது இலக்காக இருந்தாலும், தேவைக்கேற்ப அடுத்த ஆண்டு கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்புதிய அறிவிப்புகளை ஈப்போ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 2026 தேசியத் தயார்நிலை மாதத் தொடக்க விழாவில் அவர் வெளியிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →