Oct 11, 2026
Thisaigal NewsYouTube

2027ஆம் ஆண்டு பட்ஜெட்டின் வெற்றி மக்களின் வருமானம், வேலை வாய்ப்பைப் பொறுத்தது: சம்சூரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
2027ஆம் ஆண்டு பட்ஜெட்டின் வெற்றி மக்களின் வருமானம், வேலை வாய்ப்பைப் பொறுத்தது: சம்சூரி

2027ஆம் ஆண்டு பட்ஜெட்டின் வெற்றி, மக்களின் வருமானத்தை உயர்த்துவது, தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, வாழ்க்கைச் செலவைக் குறைப்பது ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

459.8 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கொண்ட பட்ஜெட்டில், 376.8 பில்லியன் ரிங்கிட் நிர்வாகச் செலவுக்கும், 83 பில்லியன் ரிங்கிட் மேம்பாட்டுச் செலவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், 61 பில்லியன் ரிங்கிட் கடன் வட்டிச் செலவுக்குச் செல்வதால், அரசாங்கம் செலவினத் திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எஸ்டிஆர், சாரா உதவிகளையும் குறைந்தபட்ச மாதச் சம்பளத்தை 2,000 ரிங்கிட்டாக உயர்த்தும் நடவடிக்கையையும் வரவேற்ற அவர், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதுடன், உள்ளூர் நிறுவனங்களை வலுப்படுத்தவும் தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →