Oct 11, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம்: கோலாலம்பூர், சிலாங்கூரின் நான்கு மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை பள்ளிகள் மூடல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம்: கோலாலம்பூர், சிலாங்கூரின் நான்கு மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை பள்ளிகள் மூடல்

புகைமூட்டம் காரணமாக, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டக் கல்வி அலுவலகங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள் நாளை, அக்டோபர் 12ஆம் தேதி திங்கட்கிழமை மூடப்படும் எனக் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாட்லீனா சீடேக் அறிவித்துள்ளார்.

இதன்படி, கோலாலம்பூரில் பங்சார், புடு, சிலாங்கூரில் உலு லங்காட், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் பெர்டானா ஆகிய மாவட்டக் கல்வி அலுவலகங்களின் கீழ் இயங்கும் பள்ளிகள் மூடப்படவுள்ளன.

புகைமூட்டத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →