புகைமூட்டம் மற்றும் வானிலை நிலவரம் காரணமாக, சுபாங் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்துக்கும் சிங்கப்பூரின் செலேதார் விமான நிலையத்துக்கும் இடையிலான அனைத்து திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளையும் ஃபயர்ஃபிலை நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இந்த ரத்து நடவடிக்கை அக்டோபர் 10ஆம் தேதி முதல் நாளை, அக்டோபர் 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இதனால், இரு வழித்தடங்களிலும் தினசரி இயக்கப்படும் ஆறு ஜோடி விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பயணிகள் தொடர்பு கொள்ளப்பட்டு, இருக்கைகள் கிடைப்பதைப் பொறுத்து மலேடியா ஏர்லைன்ஸ் விமானங்களில் மறுபதிவு செய்யப்படுவார்கள். மாற்று விமானத்தில் பயணம் செய்ய விரும்பாதவர்களுக்கு, அசல் கட்டண முறையின் மூலம் 30 வேலை நாட்களுக்குள் முழுப் பணமும் திருப்பி வழங்கப்படும் என ஃபயர்ஃபிலை தெரிவித்துள்ளது.








