Oct 11, 2026
Thisaigal NewsYouTube

தாதியர் பற்றாக்குறையைச் சமாளிக்க புதிய நியமனங்கள் விரைவுபடுத்தப்படும்: சுகாதார அமைச்சர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாதியர் பற்றாக்குறையைச் சமாளிக்க புதிய நியமனங்கள் விரைவுபடுத்தப்படும்: சுகாதார அமைச்சர்

வெளிநாடுகளுக்குத் தாதியர் வேலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தவும், அரசுத் தாதியர் சேவையை வலுப்படுத்தவும் புதிய தாதியர்களை விரைவாக நியமிப்பதுடன், பணியில் இருப்பவர்களின் நலன்களும் மேம்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

அரசுப் பணியாளர் ஊதிய முறையின் கீழ் சம்பள உயர்வு, தகுதிக்கேற்ப ஊக்கத்தொகை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, போஸ்ட் பேசிக் ஊக்கத்தொகை மாதம் 100 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், சுழற்சி முறையில் பணிபுரியும் தாதியர்களுக்கு வாரம் 42 மணி நேர வேலைமுறை தொடர்வதுடன், பயிற்சி, பதவி உயர்வு மற்றும் விருப்பத்தின் அடிப்படையிலான பணியிட மாற்றங்களுக்கும் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்படுகின்றன. இனி புதிதாக நியமிக்கப்படும் தாதியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அல்லாமல் நிரந்தரப் பணியிடங்களில் அமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →