Oct 11, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு தீ விபத்தில் வீடிழந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகள்: டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு தீ விபத்தில் வீடிழந்த குடும்பங்களுக்கு மாற்று வீடுகள்: டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு உறுதி

பினாங்கு, பிறை, கம்போங் மேயின் ரோட் பகுதியில் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதமடைந்தன. அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவசர அவரமாக வெளியேறியதால் அவர்களால் எந்தவோர் உடமையையும் மீட்க இயலவில்லை. இதில் பாதிக்கப்பட்ட 10 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை அக்டோபர் 8ஆம் தேதி நேரில் சந்தித்த பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு, நிலவரங்களைக் கேட்டறிந்தார். அத்துடன் உடனடி நிதியுதவி வழங்கி, தேவைப்படக்கூடிய இதர உதவிகளுக்கு தமது அலுவலகத்தில் அணுகும்படி கேட்டுக் கொண்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாக் மண்டின் பகுதியில், மாதம் சுமார் 250 ரிங்கிட் செலுத்தி 15 ஆண்டுகளில் வீட்டைச் சொந்தமாக்கும் வாடகை-கொள்முதல் திட்டத்தின் கீழ் மாற்று வீடுகள் வழங்குவதற்கான வாய்ப்பையும் டத்தோ ஸ்ரீ சுந்தராஜு முன்வைத்துள்ளார்.

மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வீட்டு வசதிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்த பிறை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜு , வெள்ளப் பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் கம்போங் மேயின் ரோட் பகுதியில் மறுமேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →