Oct 12, 2026
Thisaigal NewsYouTube

கணவரால் கத்தியால் குத்தப்பட்ட செவிலியரின் குடும்பத்துக்கு நலத்துறை உதவி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கணவரால் கத்தியால் குத்தப்பட்ட செவிலியரின் குடும்பத்துக்கு நலத்துறை உதவி

கிளந்தான் மாநிலம், கம்போங் பாடாங் லெப்பாய் பகுதியில் கணவரால் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்ட 44 வயது செவிலியரின் குடும்பத்துக்கு நெருக்கடி கால ஆலோசனை மற்றும் தேவையான உதவிகளை வழங்க நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வாரம் பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று ஆலோசகர்கள் உதவி வழங்கியதாக மாநில நலத்துறை இயக்குநர் சே சம்சுஸுகி சே நோ தெரிவித்துள்ளார்.

ராஜா பெரெம்புவான் ஸைனால் II மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த செவிலியரின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும், சிக்கல்கள் ஏற்படாவிட்டால் அடுத்த ஓரிரு நாட்களில் காயங்களுக்கான கட்டுகளை அகற்றி, சாதாரண வார்டுக்கு மாற்ற முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவத்திற்கு விவாகரத்து தொடர்பான தகராறே தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக 47 வயதுடைய கணவரைக் கைது செய்த போலீசார், அக்டோபர் 6-ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →