Sep 29, 2026
Thisaigal NewsYouTube
குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் சிக்கிய பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் முதலமைச்சரிடம் மன்னிப்பு
தற்போதைய செய்திகள்

குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் சிக்கிய பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் முதலமைச்சரிடம் மன்னிப்பு

Share:

ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.25-

குடும்ப வன்முறை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் ஒருவர், அந்த விவகாரம் தொடர்பாக, அம்மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயாவ்விடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

அக்குற்றச்சாட்டைத் தான் தீவிரமாகக் கருதுவதாகவும், அதனை விசாரிக்கும் பொறுப்பை மாநில போலீசாரிடம் ஒப்படைப்பதாகவும் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினருக்கும், அவரது மனைவிக்கும் இடையிலான குடும்பப் பிரச்சினை காரணமாக, இருவரும் போலீசாரிடம் புகார் அளித்த பின்னர், அதனைத் திரும்பப் பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினரே அதன் தொடர்புடைய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் சாவ் கோன் இயாவ் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, சம்பந்தப்பட்ட ஆட்சிக் குழு உறுப்பினர் தனது மனைவியைச் சித்திரவதைக்குள்ளாக்கியதாகவும், அதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Related News