Oct 24, 2026
Thisaigal NewsYouTube

மாணவர்களுக்கு மதுபானம் பரிமாறப்பட்டதாகப் புகார்: நெகிரி செம்பிலான் கல்வித் துறை விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாணவர்களுக்கு மதுபானம் பரிமாறப்பட்டதாகப் புகார்: நெகிரி செம்பிலான் கல்வித் துறை விசாரணை

நெகிரி செம்பிலானில் பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரவு விருந்தில், மாணவர்கள் மதுபானம் பரிமாறியதாக எழுந்த புகார் குறித்து மாநிலக் கல்வித் துறை விசாரணையை இறுதிக் கட்டத்துக்குக் கொண்டு சென்றுள்ளது.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இந்த விருந்து, பள்ளி வளாகத்துக்கு வெளியே முன்னாள் மாணவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மதுபானங்களைக் கையாளும் அல்லது பரிமாறும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படக்கூடாது என்று கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. மாணவர்கள் மதுபானம் பரிமாறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகமும் முன்னாள் மாணவர் சங்கமும் மறுத்துள்ளன.

பொதுமக்கள் புகார் மேலாண்மை முறைமையான SISPAA மூலம் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெறுவதுடன், பள்ளி நடைமுறைகளை முறையாகப் பின்பற்றியதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.

விதிமீறல் அல்லது கடமையில் அலட்சியம் கண்டறியப்பட்டால், நடைமுறையிலுள்ள விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அது உறுதியளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →