உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மக்களின் வாழ்க்கைச் செலவுச் சுமையைக் குறைக்க ஆண்டுக்கு 45 பில்லியன் ரிங்கிட் வரை எரிபொருள் மானியத்தை ஏற்க அரசாங்கம் தயாராக இருப்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ரோன்95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.99 ரிங்கிட்டாகத் தொடர்ந்து நிலைநிறுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் கூறினார். அனைத்துலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 120 முதல் 130 அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ள நிலையிலும், மக்களின் சுமையைவிட அரசாங்கத்தின் சுமை அதிகமாக இருப்பதே சிறந்தது என்றார்.
மலாக்கா, குருபோங் ஹாங் ஜெபாட் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற தேசிய வாழ்க்கைச் செலவுத் திட்ட அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.








