Oct 24, 2026
Thisaigal NewsYouTube

வேஸ் செயலிக்குத் தடை விதிக்கும் முன் நிபுணர்களின் கருத்தைப் பெற வேண்டும்: யியோ பீ யின் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேஸ் செயலிக்குத் தடை விதிக்கும் முன் நிபுணர்களின் கருத்தைப் பெற வேண்டும்: யியோ பீ யின் வலியுறுத்தல்

வேஸ் வழிகாட்டிச் செயலிக்குத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கும் முன், தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துகளை அரசாங்கம் கேட்டறிய வேண்டும் என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் யியோ பீ யின் வலியுறுத்தியுள்ளார்.

மலேசியாவில் ஆறு மில்லியன் சாலைப் பயனர்கள் இந்தச் செயலியை நம்பியிருப்பதால், தடை அவர்களின் அன்றாடப் பயணங்களையும் இணையவழிப் பொருளாதாரத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கலாம் என அவர் எச்சரித்தார்.

வேஸைத் தடை செய்யாத சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து வளைகுடா நாடுகளையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையில், அரசாங்கத்தின் முக்கியத் தகவல்களும் தனிப்பட்ட தரவுகளும் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற கவலையால், அரசாங்க ஊழியர்கள் வேஸ் பயன்படுத்துவதை நிறுத்துமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →