வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சமாளித்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்பார் இப்ராஹிம் ஐந்து ஆண்டு தேசியச் செயல் திட்டத்தை இன்று தொடக்கி வைத்தார். 2030ஆம் ஆண்டை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தில், 35 உத்திகளின் கீழ் 429 நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
வருமானம், உணவு, சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, வீடமைப்பு, பயன்பாட்டுச் சேவைகள் உள்ளிட்ட எட்டு முக்கியத் துறைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மக்களின் வருமானத்தை உயர்த்துவதுடன், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை நிலைப்படுத்துவது இதன் முக்கிய நோக்கங்களாகும் என்று பிரதமர் விவரித்தார்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் அர்மிஸான் அலி கூறுகையில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை மேம்படுத்துவதுடன், புதிய நடவடிக்கைகளும் அறிமுகப்படுத்தப்படும் என்றார். மேலும், தேசிய வாழ்க்கைச் செலவு நடவடிக்கை மன்றமான NACCOL, 429 நடவடிக்கைகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் விரிவான பொறுப்பையும் ஏற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் தொடக்க விழா, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையில் மலாக்கா, குருபோங், காம்ப்லெக்ஸ் சுக்கான் ஹாங் ஜெபாட் விளையாட்டு வளாகத்தில் இன்று நடைபெற்றது. நடைபெற்றது. இந்நிகழ்வில் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் ஃபுஸியா சாலேவும் கலந்து கொண்டார்.








