Oct 24, 2026
Thisaigal NewsYouTube

புகைமூட்டம் குறைந்ததால் ஜோகூர் பள்ளிகள் திங்கட்கிழமை மீண்டும் திறப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புகைமூட்டம் குறைந்ததால் ஜோகூர் பள்ளிகள் திங்கட்கிழமை மீண்டும் திறப்பு

ஜோகூர் மாநிலத்தில் புகைமூட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளும் வரும் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக மாநிலம் முழுவதும் காற்றுத் தரக் குறியீடு படிப்படியாகக் குறைந்துள்ளதாக, மாநிலக் கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் டாக்டர் முஹமட் நகிப் முஹமட் கஸாலி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அமைப்புகளின் மதிப்பீடுகளின் அடிப்படையில், ஜோகூர் மாநிலப் பேரிடர் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

காற்றின் திசை மாற்றம், அதிகரிக்கும் ஈரப்பதம், எதிர்பார்க்கப்படும் மழை ஆகியவை புகைமூட்டத்தைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் ஆண்டு இறுதித் தேர்வுகளையும் எஸ்பிஎம் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில், கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →