ஈப்போ, டிசம்பர்.09-
கடந்த மாதம் முதியவர் ஒருவரை கொலை செய்ததாக வேலையற்ற நபர் ஒருவர் பேரா, ஸ்ரீ மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
49 வயது லின் சீ மிங் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் ஃபாக்ருல் ராஸி அப்துல்ஹாமிட் Fakrul முன்னிலையில் நிறுத்தப்பட்டு மெண்டரின் மொழியில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கு, உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால் அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படவில்லை.
கடந்த நவம்பர் 26 ஆம் தேதி காலை 4.44 மணிக்கு மஞ்சோங் மாவட்டம், சித்தியவான், கம்போங் கோ, கம்போங் பாருவில் உள்ள ஒரு வீட்டில் 78 வயது லிங் சின் கியான் என்பவரைக் கொலை செய்ததாக அந்த நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
இவ்வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.








