Sep 6, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.எம். தேர்வு தேதியில் குழப்பம்! மன்னிப்பு கேட்ட தேர்வு வாரியம்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.எம். தேர்வு தேதியில் குழப்பம்! மன்னிப்பு கேட்ட தேர்வு வாரியம்

Share:

2026-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு தேதியை அறிவிப்பதில் ஏற்பட்ட குழப்பத்திற்காக கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் இன்று பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட தேர்வு தேதிகள் தொடர்பான அறிக்கையால் ஏற்பட்ட குழப்பத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தகவல்களைச் சரிபார்த்து வெளியிடும் நடைமுறை மேலும் மேம்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

2026 எஸ்.பி.எம். தேர்வை நாடு முழுவதும் 4 லட்சத்து 20 ஆயிரத்து 879 மாணவர்கள், 3,334 தேர்வு மையங்களில் எழுதவுள்ளனர்.

இந்த முக்கியத் தேர்வு வரும் நவம்பர் 23 முதல் டிசம்பர் 17 வரை நடைபெறும். சரியான தகவல்களுக்கு தேர்வுகள் வாரியத்தின் அதிகாரப்பூர்வ தேர்வு அட்டவணையையே மாணவர்கள் மற்றும் பெற்றோர் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

SPM தேர்வு தேதியில் குழப்பம்! மன்னிப்பு கேட்ட தேர்வு வாரியம் | Thisaigal News