தமது மனைவியை அடித்து காயப்படுத்தியதாக கார் கழுவும் தொழிலாளர் ஒருவர், பெட்டாலிங் ஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
30 வயது எல். தனேஸ்வரன் என்ற அந்த தொழிலாளி, கடந்த ஜுன் 29 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் பண்டார் பூச்சோங் ஜெயா, ஜாலான் 5/3 இல் உள்ள அடுக்குமாடி வீட்டில் தமது மனைவி 29 வயதுடைய எஸ். கஸ்தூரியை அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
மாஜிஸ்திரேட் ஷாஹ்ரில் அனுவார் அஹ்மாட் முஸ்தஃபா முன்னிலையில் நிறுத்தப்பட்ட தனேஸ்வரன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஓராண்டு சிறை அல்லது 2 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


