Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சுனாமி எச்சரிக்கையை மலேசியா அணுக்கமாகக் கண்காணிக்கிறது
தற்போதைய செய்திகள்

சுனாமி எச்சரிக்கையை மலேசியா அணுக்கமாகக் கண்காணிக்கிறது

Share:

புத்ராஜெயா, ஜூலை.30-

ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்தில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சுனாமி எச்சரிக்கையை மலேசியா அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் இன்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மலேசியர்களும் மிக எச்சரிக்கையாகவும், விழிப்பாகவும் இருக்கும்படி விஸ்மா புத்ரா வலியுறுத்தியுள்ளது.

Related News