2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பிரதமர் தமிழ் மொழியின் கருவூலமான திருக்குறளை மேற்கோள் காட்டினார்
பொருட்பாலில் இடம்பெற்றுள்ள இறைமாட்சி எனும் அதிகாரத்தில் இருந்து 385வது குறளான
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
எனும் திருக்குறளைக் கூறிய அவர், முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் எனும் விளக்கத்தை அனைவருக்கும் புரியும்படி குறிப்பிட்டு, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தார்.








